Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மருத்துவர்களின் கட்டாய பணிக் காலத்தை ஓராண்டாக குறைக்க வலியுறுத்தல்

மருத்துவர்களின் கட்டாய பணிக் காலத்தை ஓராண்டாக குறைக்க வலியுறுத்தல்
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டுகளில் சேர்ந்த மருத்துவர்களின் கட்டாயப் பணிக்காலத்தைக் குறைத்து, தேர்வு முடிந்த நாளிலிருந்து பணிக்காலத்தைக் கணக்கிட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

மருத்துவர்களின் கட்டாயப் பணிக்காலத்தை ஓராண்டாகக் குறைத்தல், பயிற்சிக்கால உதவித் தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:

முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை முடித்த அரசு சாரா மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும். போதிய பணியிடங்கள் இல்லாததால், இந்தக் காலத்தை ஓராண்டாகக் குறைத்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். குறிப்பாக, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டுகளில் சேர்ந்த மருத்துவர்களின் கட்டாயப் பணிக்காலத்தைக் குறைத்து, தேர்வு முடிந்த நாளிலிருந்து பணிக்காலத்தைக் கணக்கிட வேண்டும்.

மேலும், பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் உதவித்தொகையை உயர்த்த வேண்டும். கட்டாயப் பணியில் உள்ள பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக் காலமாகக் கணக்கிட்டு, அந்தக் காலத்தை கட்டாயப் பணிக் காலத்தில் கழிக்க வேண்டும். மருத்துவத் துறைப் பணியாளர்களின் கருத்துரிமையைப் பாதிக்கும் சுற்றறிக்கையையும் அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக்கால உதவித்தொகை கடைசியாக 2021-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, அரசு மருத்துவமனைகளில் போதிய பணியிடங்கள் இல்லாததால் கட்டாயப் பணி ஒதுக்கீட்டில் சிக்கல்கள் நீடிப்பதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் கோரிக்கைகளில் நிலவும் பாரபட்சத்தை நீக்கி, கட்டாயப் பணிக்காலக் குறைப்பு, உதவித்தொகை உயர்வு மற்றும் மகப்பேறு விடுப்புக்கான சலுகைகளை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி
SpaceX raised $40 bn in debt, says Musk
அடுத்த செய்தி
ஆசிய விளையாட்டில் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வரவேற்பு

தொடர்புடைய செய்திகள்